பூத் ஸ்லிப் இல்லை என்றாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம் - தலைமை தேர்தல் அதிகாரி

           
பூத் ஸ்லிப் இல்லை என்றாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: -

தமிழகத்தில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.  வாக்குச்சாவடி ஊழியர்களுக்கு கொரோனா பாதுகாப்பு கவசம் வழங்கப்படும். தமிழகத்தில் 50 சதவீத வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். கொரோனா பாதித்தவர்கள் கவச உடையுடன் வந்து வாக்களிக்க ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. 

பூத் சிலிப் இல்லை என்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம். மாநிலம் முழுவதும் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 10,813 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. 4,17,524- பணியாளர்கள் நாளை தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். 

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாக்குச்சாவடியில் காய்ச்சல் பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ரூ.428.46 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் 6.28 கோடி வாக்காளர்கள் நாளை வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 1950 என்ற எண்ணை தொடர்பு கொண்டு வாக்காளர்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம்.” என்றார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments