கோடை வெயில் காலம் கோபாலப்பட்டிணம் வாக்காளர்கள் & GPM மீடியாவின் வாசகர்கள் அனைவருக்கும் GPM மீடியாவின் ஒரு அன்பான வேண்டுகோள்





2021 சட்டமன்ற தேர்தல்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்  06/04/2021 செவ்வாய் கிழமை காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை சட்டபேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

கோடை வெயில் காலம்

கோடைகாலம் என்பதால் அனைத்து 100 டிகிரி அதிகளவில் வெயில் கொளுத்துகிறது. தமிழகத்தில் புதுக்கோட்டை உட்பட சில மாவட்டங்களில் இயல்பை விட வெயில் சுட்டெரிக்கும் என  சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதனால், வாக்காளர்கள் அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள்...

காலையிலேயே ஓட்டுபோடுங்க ப்ளீஸ்..

காலையில் 7 மணிக்கே தங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று வாக்களியுங்கள் ப்ளீஸ்... 

கோடைக்காலம் என்பதால் கூடியவரை காலையிலேயே சென்று வாக்களிப்பது சிறந்தது. இதன்மூலம் வெயிலில் வாடுவதிலிருந்து தப்பிக்கலாம்.

 கையில் தண்ணீர் பாட்டில், சிறிய குடை எடுத்துச் செல்லலாம், அது நேரடி வெயிலிலிருந்து காக்க உதவும்.

வெயில் கொடுமையில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.  

ஓட்டு போடுவது ஒவ்வொரு இந்தியனின் ஜனநாயக கடமை.


5 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தலில், நாம் வாக்களிக்காவிட்டால், நமக்கு விருப்பம் இல்லாதவர்கள் ஆட்சிக்கு வந்துவிடுவார்கள். அதன்பிறகு நாம் விரும்புகிறவர்கள் ஆட்சிக்கு வர இன்னும் 5 வருடங்கள் காத்திருக்க வேண்டும். அதனால் கண்டிப்பாக, உங்கள் ஜனநாயக கடமையை செய்து, நீங்கள் விரும்பும் வேட்பாளர் வெற்றிபெற கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்.

அன்புடன்.... 

GPM மீடியா குழு,
கோபாலப்பட்டிணம்
மீமிசல்
ஆவுடையார் கோவில் தாலுகா
புதுக்கோட்டை மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments