வணக்க வழிபாடுகளை வீடுகளில் நிறைவேற்றிக் கொள்வோம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெளியிடும் அறிக்கை






இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் கிருமி வேகமாக பாதிப்பை உருவாக்கி வருவதை நீங்கள் அறிவீர்கள். நோய் பரவுவதை தடுக்க அரசு திணறி  வருகின்றது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள், ஆக்சிஜன், வெண்டிலேட்டர் வசதிகள் இல்லாமல் இறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்து வருகின்றனர்.  இதனால் மத்திய, மாநில அரசுகள் நோய் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன.

கொரோனா நோய் வேகமாக பரவி வருவதால் அரசு சில நெறி முறைகளுடன் லாக் டவுன் அறிவித்து வருகிறது.

அதில் 30 ம் தேதி வரை வழிபாட்டு தளங்களில் பொது மக்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று அறிவிப்பு வந்துள்ளது. 

அந்த நெறி முறைகளை கடைபிடித்து  கீழ்கண்டவாறு  அமைத்துக் கொள்வும்

📌ஐவேளை தொழுகைகளை பள்ளிவாசல் இமாம் மற்றும் பொறுப்பாளர்களை கொண்டே நிறைவேற்றிக் கொள்ளவும்.

📌பொதுமக்கள் தங்களுடைய வீடுகளில்  ஐவேளை தொழுகையை நிறைவேற்றிக் கொள்ளவும்.

📌இரவு தொழுகைகளையும் இல்லங்களில் தொழுது கொள்ளவும். 

📌சமூக இடைவெளியுடன் கஞ்சி விநியோகம் செய்து கொள்ளவும். 

📌இப்தார் ஏற்பாடுகளை வீடுகளில் செய்து கொள்ளவும்.

30 தேதி வரை இந்த நடைமுறை தொடரும். பின்னர் சூழல் அறிந்து வழி காட்டப்படும். (இன்ஷா அல்லாஹ்)

நோய் பரவும் நேரங்களில் பாதுகாப்புடன் இருப்பது அவசியம் என மார்க்கம் நமக்கு வழி காட்டி உள்ளது.

உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.
திருக்குர்ஆன்  2:195

இப்படிக்கு,
இ.முஹம்மது,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments