கோபாலப்பட்டிணம் வாக்காளர்களின் ‘ஒரு விரல் புரட்சி’



2021 சட்டமன்ற தேர்தல் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 06/04/2021 செவ்வாய்க்கிழமை காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை சட்டபேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த தேர்தலில், கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த இளம் வாக்காளர்கள் மற்றும் முதன்முறையாக வாக்களிக்க இருந்த இளைஞர்கள், இளம்பெண்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

வாக்களித்த சந்தோஷத்தில் வாக்குச்சாவடி அருகே நண்பர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

முதன்முறையாக வாக்களித்தவர்கள் மை தீட்டப்பட்ட தங்கள் விரலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ‘வாட்ஸ்-அப்’, ‘பேஸ்-புக்’, ‘டுவிட்டர்’, ‘இன்ஸ்டாகிராம்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ‘ஒரு விரல் புரட்சி’ எனும் பெயரில் பதிவிட்டு மகிழ்ந்தனர். மேலும் பலரது ‘வாட்ஸ்-அப்’களிலும் நேற்று ஓட்டுப்போடுவதை வலியுறுத்தும் வகையிலான படங்களே முகப்பு காட்சியாக வைக்கப்பட்டு இருந்தன.

‘நான் ஓட்டு போட்டுவிட்டேன், நீங்க?’, என்பன போன்ற வாசகங்களையும் நேற்று இளைஞர்கள் வேகவேகமாக சமூக வலைதளங்களில் பரவ செய்தனர். இதுவும் ஒரு வகையில் விழிப்புணர்வாகவே அமைந்தது.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...




Post a Comment

0 Comments