கொரனோ வைரஸ் அதிகரிப்பு கோபாலப்பட்டிணம் வாக்காளர்கள் & GPM மீடியாவின் வாசகர்கள் அனைவருக்கும் GPM மீடியாவின் ஒரு அன்பான வேண்டுகோள்

2021 சட்டமன்ற தேர்தல்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்  06/04/2021 செவ்வாய் கிழமை காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை சட்டபேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

கொரனோ வைரஸ்  அதிகரிப்பு

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் முதன் முறையாக கரோனா காலத்தை ஒட்டி வாக்குப்பதிவு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

உங்கள் குழந்தைகள் நலனுக்காகவும், உங்கள் குடும்பம் நலனுக்காகவும், உங்கள் ஊர் நலனுக்காகவும், உங்கள் ஊரில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கண்டிப்பாக மாஸ்க் அணிந்து செல்லுங்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். 

வாக்களித்து சென்று வீட்டிற்குள் நுழையும் முன் கைகளை நன்றாகக் கழுவிக் கொள்ளுங்கள். 

வாக்களிக்கச் செல்லும் பொழுது கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து செல்லவேண்டும். கையுறை மட்டுமே வாக்குச்சாவடியில் அளிப்பார்கள்.

வாக்குப்பதிவின் போது வரிசையில் சமூக இடைவெளியுடன் நிற்க வேண்டும்.

மத்திய,மாநில அரசு சொல்லிருக்கும் வழிமுறைகளை பின்பற்றினால் நமது குடும்பத்தையும், உறவினர்களையும் நமது ஊரையும்  கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். 

எனவே மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்களை GPM மீடியா வாசகர்கள் அனைவரும் தவறாமல் கடைப்பிடித்து கொரோனா பாதிப்பில் இருந்து அனைவரும் பாதுகாத்து கொள்ளும்படி GPM மீடியா சார்பில் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

பாதுகாப்புடன் வாக்களிப்போம், முகக்கவசம், 

சமூக இடைவெளியுடன் வாக்களிப்போம், 

தவறாது நமது வாக்கை செலுத்துவோம்.

அன்புடன்.... 

GPM மீடியா குழு,
கோபாலப்பட்டிணம்
மீமிசல்
ஆவுடையார் கோவில் தாலுகா
புதுக்கோட்டை மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments