வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாது - தேர்தல் ஆணையம்










வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாது - தேர்தல் ஆணையம்
வாக்குச்சாவடியில் உள்ள, வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்களிப்பதற்காக செல்பவர்கள் தங்கள் அடையாளத்தை நிரூபிப்பதற்காக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை கொண்டு செல்ல வேண்டும். 

ஒருவேளை அந்த அட்டை இல்லாதவர்கள், ஆதார் அட்டை, ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் பணி அட்டை, வங்கி கணக்கு புத்தகம், மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், பொதுத்துறை நிறுவனங்களால் வரையறுக்கப்பட்ட பணி அடையாள அட்டைகள், நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற அலுவலக அடையாள அட்டை ஆகிய 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை எடுத்து செல்லலாம்.

எனினும் வாக்குச்சாவடியில் உள்ள, வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments