ஆவின் பால் விலை குறைப்பு - இன்று மே 16 முதல் அமலுக்கு வந்தது



தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட 2-வது அறிவிப்பாக ஆவின் பால் விலை குறைப்பு வெளியிடப்பட்டு இருந்தது.

ஆவின் பால் விலை குறைப்பு - இன்று முதல் அமலுக்கு வந்தது.

தமிழக அரசின் அறிவிப்பின்படி ஆவின் நீல நிறம் லிட்டருக்கு ரூ.40, அரை லிட்டர் ரூ.20-க்கும், ஆவின் பச்சை நிறம் அரை லிட்டர் ரூ.22-க்கும், ஆவின் ஆரஞ்சு அரை லிட்டர் ரூ.24-க்கும், ஆவின் இளஞ்சிவப்பு நிறம் அரை லிட்டர் ரூ.18.50-க்கும், இன்று முதல் விற்பனை செய்யப்படும். டீமேட் எனப்படும் பால் லிட்டருக்கு ரூ.57-க்கு விற்கப்படும்.

பால் அட்டை வைத்திருப்போருக்கு லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி அட்டைதாரர்களுக்கு ஆவின் நீல நிற பால் பாக்கெட் லிட்டருக்கு ரூ.37-க்கும், அரை லிட்டர் ரூ.18.50-க்கும் கிடைக்கும். பச்சை நிறமுள்ள அரை லிட்டர் பால் ரூ.21-க்கும், ஆரஞ்சு நிறம் ரூ.23-க்கும், இளஞ்சிவப்பு நிறம் ரூ.18-க்கும் கிடைக்கும் என்று ஆவின் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற கடந்த 7-ம் தேதி 5 கோப்புகளில் கையெழுத்திட்டு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் 2-வது அறிவிப்பாக ஆவின் பால் விலை குறைப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
இந்த பால் விலை குறைப்பானது மே 16-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவித்தார்.

இந்நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள ஆவின் பால் விலை குறைப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் நடைமுறைக்கு வந்தது.

தமிழகம் முழுவதும் ஆவின் பால் 25 லட்சம் லிட்டர்கள் வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைப்பு காரணமாக ஆண்டுக்கு ரூ.300 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று ஆவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments