ஏம்பக்கோட்டையில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் பலியானார். புதிதாக 442 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவிவருகிறது. மாவட்டத்தில் நேற்று மிக அதிகமாக புதிதாக 442 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 18 ஆயிரத்து 729 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்தவர்களில் 227 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 877 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் தற்போது 2,671 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று புதுக்கோட்டையை சேர்ந்த 73 வயது முதியவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்து போனார். மாவட்டத்தில் இதுவரை கொரோனா பதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 181 பேர் உயர்ந்துள்ளது.

மீமிசல் ஊராட்சிக்கு உட்பட்ட ஏம்பக்கோட்டை கிராமத்தில் சுமார் 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அப்பகுதியில் உள்ள 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களை தனிமைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments