பலத்த காற்று வீசும்: புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என புதுக்கோட்டை மீன் வளத்துறை எச்சரிக்கை!



மேற்கு மத்திய வங்காளவிரிகுடா மற்றும் தமிழ்நாடு கடற்பகுதியில் தென்மேற்கு திசையில் பலத்த சூரைக்காற்று நாளை 22.05.2021 முதல் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்திய மேற்கு மத்திய வங்காள விரிகுடா மற்றும் தமிழ்நாடு கடற்பகுதியில் தென்மேற்கு திசையில் வருகின்ற 22.05.2021 முதல் பலத்த சூரைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் வரும் 22.05.2021 முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே கோபாலப்பட்டிணம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை மீனவர்கள் 22.05.2021 முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments