புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோர் இறந்தால் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடு! கலெக்டர் தகவல்!!புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறக்கும் பெற்றோர்களின் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அக்குழந்தைகளுக்கு தங்குமிடம், உணவு உள்ளிட்டவைகள் வழங்கி தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ அரசு அங்கீகாரம் பெற்ற குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்து பாதுகாத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

எனவே இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் 80564 31053, 04322 -221266, குழந்தைகள் நலக்குழு தலைவர் 94861 56043, 04322 - 222492 மற்றும் சைல்டுலைன் இலவச தொலைபேசி எண் 1098 ஆகிய செல்போன் மற்றும் தொலைபேசி எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம் என கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments