அறந்தாங்கியில் சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் கொரோனாவுக்கு உயிரிழப்புஅறந்தாங்கி சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று பரிதாபமாக இறந்தார்.

அறந்தாங்கி சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்தவர் சுரேஷ் கண்ணன் (வயது 51). இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், பிரவீன் சந்துரு (21) என்ற மகனும், பூஜாஷி (17) என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் சுரேஷ் கண்ணனுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 13-ந் தேதி மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அப்போது, நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து புதுக்கோட்டை மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் அறந்தாங்கி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments