புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்திற்கு காய்கறிகள் வாங்க குடும்பத்தோடு வர வேண்டாம்: போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள்!புதிய பஸ் நிலையத்தில் காய்கறிகள் வாங்க சாரை, சாரையாக வந்த பொதுமக்களிடம் போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள் விடுத்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், "குடும்பத்தோடு வந்து காய்கறிகள் வாங்க யாரும் வர வேண்டாம். வீட்டிற்கு ஒருவர் வந்து மொத்தமாக காய்கறிகளை வாங்கி செல்லுங்கள். குழந்தைகளை அழைத்து வராதீர்கள். நோய் தொற்று பரவலின் தன்மையை உணர்ந்து பாதுகாப்பாக இருங்கள். உங்களுக்காக போலீசார் உயிரை கொடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஆனால் பொதுமக்கள் பலர் கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் இருப்பது வேதனையளிக்கிறது. வீட்டின் அருகே இருக்கும் கடைகளிலேயே காய்கறிகளை வாங்கி கொள்ளுங்கள். 

வியாபாரிகளும் பொறுப்புடன் வியாபாரம் செய்யுங்கள். சமூக இடைவெளி கடைப்பிடிக்காத கடைகளுக்கு இனி அனுமதி கிடையாது'' என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments