கோபாலப்பட்டிணம் ரேஷன் கடையில் ரூ.2000 கொரோனா நிவாரண நிதி வழங்கிய அறந்தாங்கி எம்எல்ஏகோபாலப்பட்டிணம் ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல்வர் அறிவித்த கொரோனா நிவாரண உதவி தொகை இரண்டாயிரம் ரூபாயை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன் பயனாளிக்கு வழங்கினார்.

தமிழக முதல்வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் திமுக ஆட்சி அமைத்தால் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம்  வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற அன்றே தேர்தல் வாக்குறுதியில் அறிவித்ததுபோல குடும்ப அட்டை தாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம்  வழங்க உத்தரவிட்டார்.
இதை அடுத்து புதுக்கோட்டை மாவட்டம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் உள்ள ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக முதல்வர் அறிவித்த கொரோனா நிவாரண நிதி முதல்கட்ட தவணையாக ரூ.2000 வழங்கும் இரண்டாயிரம் ரூபாயை பயனாளிக்கு வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் உதயம்.J.தாஹீர், 3-வது வார்டு உறுப்பினர் அபுதாஹீர் மற்றும் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த திமுக நிர்வாகி பாரூக் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments