தளர்வுகளற்ற முழு ஊரடங்கு...2-வது நாளாக மீமிசலில் கடைகள் அடைப்பு வெறிச்சோடிய சாலைகள்!



தமிழகம் முழுவதும் நேற்று மே 24 முதல் அமலுக்கு வந்தது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நேற்று மே 24 காலை முதல் அமலுக்கு வந்தது. மாநிலம் முழுவதும் காவல்துறையினர் சாலையில் தடுப்புகளை வைத்து கண்காணித்து வருகின்றனர்.

கொரோனா பரவல் தடுப்பு தீவிர நடவடிக்கையாக தமிழகத்தில் மளிகை, காய்கறி கடைகள், இறைச்சி மற்றும் மீன் கடைகள் போன்றவற்றுக்கும் அனுமதி இன்றி தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு மே 24 முதல் மே 31ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு மாநிலம் முழுவதும் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். முழு ஊரடங்கின்போது ஒருசில அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது அடுத்து மீமிசல் கிழக்கு கடற்கரை சாலைகளில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. பால் கடைகள், மருந்தகங்கள் மற்றும் பெட்ரோல் பங்குகள் மட்டுமே திறக்கப்பட்டன.ஓரு சில ஹோட்டல்கள் திளக்கப்பட்டு இருந்தது.

ஊரடங்கு காரணமாக பொதுமக்களும் வீடுகளைவிட்டு வெளியேறவில்லை. இதனால் மீமிசல் கிழக்கு கடற்கரை சாலை வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் காவல்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

ஊரடங்கு உத்தரவை மதித்து பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே தங்கி இருந்தனர்.





எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments