ஏம்பல் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக மாற்றுத்திறனாளியிடம் ரூ.4 லட்சம் மோசடி: 3 பேர் மீது வழக்கு!அரசு வேலை வாங்கித் தருவதாக மாற்றுத்திறனாளியி டம் ரூ.4 லட்சம் மோசடி செய்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலை அடுத்த ஏம்பல் அருகே சந்திரட்டான் வயல் கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 34). மாற்றுத்திறனாளியான இவர் கடந்த 2015-ம் ஆண்டு அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்தார்.

இதை அறிந்த புண்ணியவயலைச் சேர்ந்த அஞ்சலை தேவி, தஞ்சாவூரை சேர்ந்த மணி, அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோர் பழனிசாமியை அணுகி மாற்றுத்திறனாளி கோட்டாவில் அரசு வேலை பெற்று தருவதாக கூறினர்.

இந்த ஆசை வார்த்தையை நம்பிய பழனிசாமி தனக்கு அரசு வேலை பெறுவதற்காக அவர்களிடம் பல்வேறு தருணங்களில் ரூ.4 லட்சம் பணம் ெகாடுத்துள்ளார். ஆனால் பழனிசாமிக்கு அரசு வேலை பெற்றுத்தரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர் தான் கொடுத்த ரூ.4 லட்சத்தை திருப்பி தருமாறு 3 பேரிடமும் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணத்தையும் கொடுக்கவில்லை.

இது குறித்து பழனிசாமி ஆவுடையார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியனிடம் புகார் கொடுத்தார். அதன் பேரில் அவர் விசாரணை நடத்தி் மணி, விஜயலட்சுமி, அஞ்சலை தேவி ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments