மணமேல்குடி ஸ்ரீவிஜய் மருத்துவமனை உட்பட 4 தனியார் மருத்துவமனைகளில் முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை!முதலமைச்சர் அவர்களின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திட 4 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பி.உமாமகேஸ்வரி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திட அனுமதிக்கப்பட்டுள்ள ஆறு தனியார் மருத்துவமனைகளில் புதுக்கோட்டை புதுகை ஸ்டார் மருத்துவமனை, முத்துமீனாட்சி மருத்துவமனை, பொன்னமராவதி ஸ்ரீதுர்கா மருத்துவமனை, மணமேல்குடி ஸ்ரீவிஜய் மருத்துவமனை ஆகிய நான்கு மருத்துவமனைகளுக்கு முதலமைச்சர் அவர்களின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இம்மருத்துவமனைகளில் இத்திட்டத்தின் கீழ் இதுவரை 13 நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளார்கள். தற்பொழுது புதுகை ஸ்டார் மருத்துவமனையில் ஓரு நோயாளியும், புதுக்கோட்டை முத்து மீனாட்சி மருத்துவமனையில் ஐந்து  நோயாளிகளும், பொன்னமராவதி ஸ்ரீதுர்கா மருத்துவமனையில் ஆறு நோயாளிகளும் இத்திட்டத்தின்கீழ் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். மேற்கண்ட திட்டத்தினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments