புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் சார்ந்த பணிகளுக்கு கட்டுப்பாட்டு அறை!



தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுத்திட முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் விவசாய பணிகள் தொய்வில்லாமல் நடைபெறும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு விவசாயிகளிடமிருந்து விளைவிக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவை நேரடியாக நுகர்வோருக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு, பல்வேறு துறைகள் மூலம் 255 நடமாடும் அங்காடிகள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

மேலும் விவசாயத்திற்கு தேவையான இடுபொருட்கள், விளைபொருட்கள் ஆகியவற்றினை எடுத்துச்செல்லவும் அதில் ஏற்படும் சந்தேகங்கள், வழிதடங்களில் தேவைப்படும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றினை ஒருங்கிணைத்திடவும், விவசாயிகளின் சாகுபடி பணிகளில் ஏற்படும் சந்தேகங்கள், உபரியான விளைபொருட்களை சந்தைபடுத்துதலில் உள்ள இடர்பாடுகள் ஆகியவை குறித்த தகவல்களை வழங்கிட மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 

இம்மையத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகத்துறை மற்றும் காவல்துறை அலுவலர்கள் ஓரிடத்தில் இருந்து தகவல் பரிமாற்றத்திற்கு உதவி செய்திட காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகளுக்கு பதில் அளித்திட உத்தரவிடப்பட்டுள்ளது. 

இக்கட்டுப்பாட்டு அறையினை 04322 - 221666 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். எனவே புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறையினை தொடர்பு கொண்டு கொரோனா முழுஊரடங்கு காலத்தில் விவசாயம் தொடர்பான அனைத்து விவரங்களையும் பெற்று பயன்பெறலாம் என கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...





Post a Comment

0 Comments