புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கு மருத்துவமனைகளில் படுக்கை விவரத்தை அறிய தொலைபேசி எண் விவரம்புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்நோயாளியாக சிகிச்சை பெற நேரிடும் நபர்கள் படுக்கை வசதி காலியாக உள்ள மருத்துவமனைகளின் விவரம் தெரிந்து கொள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் வழி காட்டுதலின் படி தாங்கள் எங்கு உள்நோயாளியாக சேர வேண்டும் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளும் அரிய வாய்ப்பு உள்ளது.பொதுமக்கள் இதனை பயன்படுத்தி வீண் அலைச்சலைத் தவிர்க்க முடியும். மையத்தில் உள்ள மருத்துவர்கள் நோயின் தன்மைக்கேற்ப படுக்கை வசதி காலியாக உள்ள மருத்துவமனைகளைப் பரிந்துரைப்பார்கள். 

இந்த மையத்தை 1077, 04322 222207 ஆகிய தொலைபேசி எண்கள் மற்றும் 75388 84840 என்ற செல்போன் எண் மற்றும் 75388 84840 வாட்ஸ்ஆப் வழியாக தொடர்பு கொள்ளலாம் என புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பூவதி தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments