திருக்கட்டளை ஊராட்சியில் ரூ. 5 செலுத்தினால் ஒரு குடம் - தண்ணீர் ஏடிஎம் இயந்திரம் ஊராட்சி சார்பில் அமைப்பு



புதுக்கோட்டை அருகே ஒரு குடம் ரூ 5-க்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை ஏடிஎம் குடிநீர் மையத்தின் மூலமாக பொதுமக்களுக்கு இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஊராட்சிகளில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு நிலத்தடி நீர் போர் மூலமாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஏற்றப்பட்டு அதன் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்த நீர் உப்பு கலந்த நீராக இருப்பதால் பொதுமக்கள் சமையலுக்கும் குழப்பதற்கும்  தேவைக்குப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

இதனால் பொதுமக்கள் தனியாரிடம் இருந்து ஒரு குடம்  ஏழு ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை   வாங்கி வருகின்றனர். இந்நிலையில் திருக்கட்டளை ஊராட்சி மேட்டுப்பட்டி பஞ்சாயத்தில் மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ 8 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

இது ஏடிஎம் இயந்திரம் போல் மாதிரி அமைக்கப்பட்டுள்ளது  ஐந்து ரூபாய் நாணயத்தை இயந்திரத்தில் செலுத்தினால்  ஒரு குடம்  சுத்திகரிக்கப்பட்ட நீர் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இந்த திட்டம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது தனியாரிடம் இருந்து கூடுதல் விலைக்கு பொதுமக்கள் குடிநீர் வாங்கி வந்த நிலையில் பஞ்சாயத்து மூலமாகவே ஒரு குடம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஐந்து ரூபாய்க்கு கிடைத்து வருவது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் பொதுமக்கள் அளிக்கும் ஐந்து ரூபாய் என்பது அந்த பஞ்சாயத்து பல்வேறு திட்டங்களுக்கு பராமரிப்பு  செலவு செய்யப்படுகிறது.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments