முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்பு: மீமிசலில் தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!!தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 159 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. மேலும் திமுக சின்னத்தில் போட்டியிட்ட 8 பேர் வெற்றி பெற்றனர்.

இதுதவிர கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 18 இடங்களிலும், விசிக 4, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ,மனிதநேய  மக்கள் கட்சி தலா இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றன. இதனால் திமுக கூட்டணி 159 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில், நேற்று மே 7 காலை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் முன்னிலையில் தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். 

புதுக்கோட்டை  மாவட்டம் மீமிசலில் திமுக தலைவர் நேற்று தமிழக முதல்வராக பதவி ஏற்பதை கொண்டாடும் வகையில் மீமிசல் நகர திமுகவினர், திமுக கொடியை ஏற்றி தொண்டர்களுக்கு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். அதை தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பேருந்தில் வந்த பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் மாவட்ட சிறுபான்மை தலைவர் பிரியம் காதர், மூத்த கழக நிர்வாகி பொற்கிழி காதர் பாட்ஷா,செயற்குழு உறுப்பினர் உதயம் தாஹீர்,மீமிசல் நகர செயலாளர் ஒன்றி கவுன்சிலர் அய்யா ரமேஷ் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments