முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று முதல் 139 டவுன் பஸ்களில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கலாம்.
தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்றதும் 5 முக்கிய அறிவிப்புகளில் கையெழுத்திட்டார். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்த அறிவிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தன. அதில் பெரும் முத்தாய்ப்பான அரசு டவுன் பஸ்களில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என்ற அரசாணையை பிறப்பித்து கையெழுத்திட்டார்.
அதன்படி பணிபுரியும் பெண்கள், உயர்கல்வி பயிலும் மாணவிகள் உள்பட அனைத்து பெண்களும் அரசு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண பஸ்களில் கட்டணமில்லாமலும், பஸ் பயண அட்டை இல்லாமலும் இன்று (சனிக்கிழமை) முதல் பயணிக்கலாம். இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த இந்த அறிவிப்பை உடனடியாக செயல்படுத்த புதுக்கோட்டையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
அதன்படி மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு டவுன் பஸ்களில் முகப்பு கண்ணாடியில் வில்லை ஒட்டும் பணி நேற்று இரவோடு, இரவாக நடைபெற்றது. இதில் 'மகளிர் பயணம் செய்ய கட்டணமில்லை' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இதனை அனைவரது கண்ணில் படும்படி பஸ்களில் முன்பக்க கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த வில்லைகள் ஒட்டப்படும் பணியை புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் டவுன் பஸ்கள் நிறுத்துமிடத்தில் கலெக்டர் உமாமகேஸ்வரி நேற்று இரவில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளர் இளங்கோ, வணிக பிரிவு மேலாளர் சுப்பு, வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு டவுன் பஸ்கள் பற்றி அதிகாரிகள் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 139 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் பெண்கள் கட்டணமில்லாமல் இன்று முதல் பயணிக்கலாம். மொத்தம் 306 வழித்தடங்களில் அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த டவுன் பஸ்களில் பெண்கள் கட்டணம் கொடுக்காமல் பயணிக்கலாம் என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.