புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் 20.05.2021 மாலை மேகமூட்டத்தோடு குளிர் காற்று வீச தொடங்கியது.
கடந்த சில நாட்களாக ஊரடங்கு மற்றும் கத்திரி வெயிலும் வெப்பமான காந்தலாலும் சிரமப்பட்ட கோபாலப்பட்டிணம் மக்களுக்கு வரபிரசாதமாக இறைவனின் கருணையாக லேசான மின்னலோடு தூறல் மழை பெய்து ஊர் நிலங்களையும் ஊர் மக்களின் மனங்களையும் குளிர்வித்தது.
நோன்பு பெருநாள் முடிந்ததோடு அடுத்த ஆறு நோன்பின் இறுதி நாளான நேற்று இறைவனின் ஆகபெரும் கிருபையாக குளிர் காற்றோடு சிறுமழை பெய்ததால் வந்த மண் வாசனை கொரானோ நோயின் கோர தாண்டவத்தை குறைக்க வேண்டும் என்ற மனக்குமுறல் மக்களிடம் எழுந்ததை காண முடிந்தது.
ஒருபக்கம் கொரானோவின் கோரப்பிடி மறுபக்கம் அதனால் ஊரடங்கு, இன்னொரு பக்கம் வறுத்தெடுக்கும் கத்திரி வெயில், ஆறு நோன்பின் சோர்வு இவை அனைத்தையும் ஒரு மழை மாற்றியிருக்கிறது என்றால் அது மிகையாகாது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.