கோபாலப்பட்டிணத்தில் கொரோனாவில் இறந்தவரை அடக்கம் செய்த எஸ்.டி.பி.ஐ.கட்சியினர்!புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கோபாலபட்டிணம் பகுதியை சேர்ந்த பெண் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரின் குடும்பத்தினர்கள் புதுக்கோட்டை மாவட்டம், தெற்கு ECR ஏரியா பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர் சாகுல் ஹமீது அவர்களை தொடர்பு கொண்டு உடலை நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு இனங்க இறந்தவர்களின் உடலை பெற்று உலக சுகாதார அமைப்பு (WHO) வழிகாட்டுதலின்படி முறையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி கோபாலபட்டிணம் கப்ரஸ்தானில் (அடக்கஸ் தளத்தில்) கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்தனர்.

தகவல்:
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா 
புதுக்கோட்டை மாவட்டம். 9942008541

கோபால பட்டிணம் யூனிட்:
9790386466 - சேக் அப்துல்லா
8220253864 - ஜாகிர் 9842106203 -Dr.ஹனிபாஎங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments