கோபாலப்பட்டிணத்தில் என்றும் உதவும் கரங்கள் சார்பில் இரண்டாவது நாட்களாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வினியோகம்

கோபாலப்பட்டிணத்தில் என்றும் உதவும் கரங்கள் சார்பில்  இரண்டாவது நாட்களாக பொதுமக்களுக்கு  கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகேயுள்ள   கோபாலப்பட்டிணத்தில் 
என்றும் உதவும் கரங்கள் சார்பில்  மே 19 காலை 7 மணி முதல் 10 மணி வரை  2 இடங்களில் இரண்டாவது நாட்களாக பொதுமக்களுக்கு   கபசுரக் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது

அவுலியா நகர் பள்ளி அருகில் மற்றும் பழைய காலனியில்
கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டது.
இதில் அதிகமான மக்கள்  பயன் அடைந்தனர்.

மேலும் தங்கள் வீடுகளுக்கு தேவையான அளவு பாத்திரத்தைக் கொண்டு வந்து பொதுமக்கள் கபசுர குடிநீர் பெற்றுச் சென்றனர் .

கோபாலப்பட்டிணம் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வினியோகம் செய்த என்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு
GPM மீடியா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

கொரேனா என்னும் இந்தக் கொடிய வைரஸ் நோய் தொற்று வராமல் இருக்க முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி இருந்து கொள்ளுங்கள்.  மக்கள் அவசியமின்றி வீட்டைவிட்டு வெளியே வருவதையும் தவிர்த்துக்கொள்ளுங்கள்.


 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments