கோபாலப்பட்டிணத்தை குளிர்வித்த கோடை மழை



மீமிசல் சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சி மீமிசல்  அருகே உள்ள  கோபாலப்பட்டிணத்தில் 
கருமேகங்கள் சூழ்ந்து  மே 19 அன்று
இரவு 8 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்தது.  இந்த திடீர் கோடை மழையின் காரணமாக சாலையோரங்களில் மழை நீர் தேங்கி நின்றது. நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால்  பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.

மழையால் கோபாலப்பட்டிணத்தில் அவ்வப்போது கரு மேகங்கள் சூழ்ந்து  மலைப்பிரதேசம் போல அதிகமான குளிர் நிலவி வருகிறது.

தொடர்ச்சியாக வெயில் வாட்டி வந்த நிலையில், திடீரென பெய்த இந்த மழை மண்ணை மட்டுமின்றி கோபாலப்பட்டிணம் மக்களின் மனதையும் குளிர வைத்து சென்றது









எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments