வைரஸ் பரவலை கட்டுப்படுத்த... அமைக்கப்பட்ட கொரோனா வார் ரூம்.. மாவட்ட வாரியாக தொடர்பு எண்கள் அறிவிப்பு
 

கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் மக்கள் தகவல்களை பெறவும் அமைக்கப்பட்டுள்ள 

கொரோனா வார் ரூம்களின் மாவட்ட வாரியான அதிகாரிகளின் தொடர்பு எண்களைச் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது கொரோனா வைரசின் 2ஆம் அலை உச்சத்தில் உள்ளது. கடந்த சில தினங்களாகவே வைரஸ் பாதிப்பு மாநிலத்தில் 33 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும், மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீர்க்கவும் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்ட வாரியாக கொரோனா வார் ரூம்களுக்கு அதிகாரிகள் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்களும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கைகள், ஆக்சிஜன் வசதி, முக்கிய மருந்துகள் குறித்த தகவல்களை வார் ரூம்களை தொடர்பு கொண்டு பொதுமக்களால் பெற முடியும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments