ஏம்பக்கோட்டையில் கொரோனா பரவலை தடுக்க தடை செய்யப்பட்ட பகுதிகளில் தகரம் கொண்டு அடைப்பு!தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையில் தினமும் தொற்று எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது. அதேபோல் சிகிச்சை பலன் இன்றி இறப்பவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

மாவட்டத்தில் நேற்று வரை 19 ஆயிரத்து 154 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 15 ஆயிரத்து 988 பேர் குணமடைந்துள்ளனர். 118 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.தற்போது 2 ஆயிரத்து 983 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மீமிசல் பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. ஒரு தெருவில் 4 பேர் மற்றும் அதற்கு மேல் தொற்று பாதிப்பு இருந்தால் தடுப்புகள் வைத்து கட்டுப்பாட்டு பகுதிகளாக கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் ஏம்பக்கோட்டையில் 17 பேருக்கு தொற்று உறுதியானதால் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு ஊராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments