கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு






கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்க கோரிய வழக்கு தொடர்பான விசாரணை நாளை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.

கொரோனாவின் இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 20 ஆயிரத்து 952 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 258 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதேபோல உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

தமிழகத்தில் தற்போது இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமலில் இருந்து வருகிறது. கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வருகிற 6-ந் தேதி காலை 4 மணி முதல் 20-ந் தேதி காலை 4 மணி வரை புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜி ராம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், "தமிழகத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments