கொரோனாவை தடுக்க நாடு முழுவதும் முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு- ராகுல் காந்தி


ஏழைகளுக்கு குறைந்த பட்ச வருமான உறுதி திட்டத்தை அறிவித்து விட்டு ஊரடங்கை அமல்படுத்தலாம்.

கொரோனா 2-வது அலையால் நாடு முழுவதும் தொற்று அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பும் 3 லட்சத்துக்கும் மேல் உள்ளது. இதுவரை இந்தியாவில் 2.02 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி பலி 3 ஆயிரத்துக்கும் மேல் இருந்து வருகிறது. இதுவரை 2 லட்சத்து 22 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

இந்தநிலையில் கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்குதான் தீர்வு என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

 இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் முழு ஊரடங்கு ஒன்றே தீர்வாகும்.

ஏழைகளுக்கு குறைந்த பட்ச வருமான உறுதி திட்டத்தை அறிவித்து விட்டு ஊரடங்கை அமல்படுத்தலாம்.

மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால் கொரோனாவால் பலர் உயிரிழந்து வருகிறார்கள்.

இவ்வாறு ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments