மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை உடனே வழங்க புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கோரிக்கை!



மீன்பிடி தடைக்காலத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் தங்கள் படகினை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்த தடை காலத்தில் தமிழக அரசால் மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக ஒரு குடும்பத்திற்கு ரூ.5ஆயிரம் வழங்கப்படும். ஆனால் இந்த வருடம் இதுவரை மீன்பிடி நிவாரணத்தொகை வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி ஊரடங்கு என்பதால் மீனவ மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். வருமானம் இல்லாததால் படகுகளை சரி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். 

எனவே தமிழக அரசு மீன்பிடி தடைக்காலம் நிவாரணத் தொகையை மீனவர்களுக்கு உடனே வழங்க வேண்டும். வழக்கம்போல் ரூ.5ஆயிரம் வழங்காமல் கூடுதலாக நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என மீனவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments