ஆலங்குடியில் ஆதரவற்ற முதியவருக்கு சிகிச்சை அளிக்க கலெக்டர் நடவடிக்கை!ஆலங்குடி அரசு மருத்துவமனை அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் காலில் புண்ணுடன் ஆதரவற்ற நிலையில் உட்கார்ந்து இருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற கலெக்டர் உமாமகேஸ்வரி அந்த முதியவர் பற்றி விசாரித்தார். அந்த முதியவர் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் சொல்லமுடியாத நிலையில் இருந்தார். பின்னர் அவர் ஆலங்குடி தாசில்தார் கருப்பையாவிடம் முதியவருக்கு மருத்துவ சேவையும், மனநல சேவையும் வழங்க ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்தினார். 

இதனையடுத்து தாசில்தார் முதியவரை ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு முதியவரைக் குளிப்பாட்டி, புத்தாடைகள் அணிவித்து உணவு வழங்கினர். பின்னர் காலில் புண் இருந்ததால் உள்நோயாளியாக அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்கான ஏற்பாடுகளை தலைமை மருத்துவர் பெரியசாமி செய்தார். 

இதைத்தொடர்ந்து அவர் மாவட்ட மன நல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments