கோவிஷீல்டு-கொரோனா முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்ட கோபாலப்பட்டிணம் இளைஞர்கள்!



தமிழகத்தில் ஜனவரி 16ம் தேதி முதல் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன்பின் 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.

இதனிடையே 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதில் ஏராளமான இளைஞர்கள் முன்பதிவு செய்தனர்.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த இளைஞர்கள் மே 25 செவ்வாய்கிழமை அன்று பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அரசு மருத்துவமனை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட முகாமில் கோவிஷீல்டு-கொரோனா முதல் தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள்.

பின்னர் தடுப்பூசி போட்டுக்கொண்ட அன்வர் கூறியாதவது:

கோபலப்பட்டிணம் ஊர் முழுக்க கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் அதிகமாக காணப்படுவதால் அரசின் கொரோன தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு அங்கமான அனைவருக்கும் தடுப்பூசி என்ற திட்டத்தில் அரசின் ஆலோசனைகளுக்கு  உட்பட்டு  கோபாலப்பட்டிணம் பள்ளிவாசல் வளாகத்தில் அரசு மருத்துவமனை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட முகாமில் நண்பர்களோடு கலந்து கொண்டு தடுப்பூசி எடுத்துக்கொண்டோம்.

இந்த முகாமில் என்னோடு மகாதீர், சாலிகு, அசாருதீன், ரியாஸ், ஹுசைன், ரசாத் ஆகியோர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்! அனைவரும் இந்த தடுப்பூசி போடும் முகாமில் கலந்துகொண்டு நோய் தொற்று நமக்கும் பிறருக்கும் பரவுவதில் இருந்து பாதுகாத்துகொள்ளுங்கள்.

அனைத்து மக்களையும் கொரோனா எனும் கொடிய நோயை விட்டு எல்லாம் வல்ல இறைவன் பாதுகாக்க பிரார்த்தனை செய்யவேண்டும்.
இவ்வாறு அன்வர் கூறினார்.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments