கோபாலப்பட்டிணத்தில் இரண்டு நாட்களாக பலத்த காற்று
அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக வலுப்பெற்று வருவதால் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மழை பகுதி மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சி மீமிசல்  அருகே உள்ள கடற்கரை கிராமமான கோபாலப்பட்டிணத்தில்
நேற்று முன்தினம் மே 14 வெள்ளிக்கிழமை மதியம் 3 மணியளவில் முதல் பலத்த காற்றால் மரங்கள் எல்லாம் ஆடின , சில இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது , மரங்கள் மட்டைகள் பலத்த காற்றால் தரையில் விழுந்தன.

அதபோல் நேற்று
மே 15 சனிக்கிழமையும் காலை முதல் அவ்வோபோது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வெயிலும் அடித்தது. பலத்த காற்றால் மரங்கள் எல்லாம் ஆடின.

தொடர்ந்து இரண்டு நாட்களாக பலத்த காற்று வீசி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர், ஏற்கனவே கொரனோ ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.

கோபாலப்பட்டிணத்தில் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில்  தொடங்கிய மே 4 முதல் கடுமையான வெயிலும் அவ்வோபோது ஆறுதலாக கோடை மழை பெய்து வருகிறது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments