முத்துப்பேட்டை அனைத்து ஜமாஅத் மற்றும் அனைத்து இயக்க கூட்டமைப்பு சார்பில் மரண அறிவிப்பு சம்மந்தமாக நடந்து கொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் வெளியிடு


முத்துப்பேட்டை அனைத்து ஜமாஅத் மற்றும் அனைத்து இயக்க கூட்டமைப்பு சார்பில் மரண அறிவிப்பு சம்மந்தமாக நடந்து கொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் வெளியீடு.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அனைத்து ஜமாஅத் மற்றும் அனைத்து இயக்க கூட்டமைப்பு சார்பில் மரண அறிவிப்பு சம்மந்தமாக நடந்து கொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் வெளியிட்ள்ள விவரம்:

நமது சமுதாய மக்கள் கொரோனா கால கட்டத்தில் மௌத் சம்மந்தமாக நடந்து கொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள்.

*மௌத் செய்தி அனைத்து பள்ளிகளிலும் அறிவிக்கப்படும், ஆனால் அடக்க நேரமும், பள்ளியின் பெயரும் அறிவிக்கப்படமாட்டாது.

*பொது மக்கள் வேண்டுமானால் மௌத் நடந்த வீட்டிற்கு பாதுகாப்புடன் சென்று வரலாம்.

*ஜனாஸாவை பள்ளிக்கு கொண்டு செல்லும் போது 20 நபர்களுக்கு மேல் செல்லவேண்டாம்.

*ஜனாஸா தொழுகை இடைவெளி விட்டு, கட்டாயம் மாஸ்க் அணிந்து தொழ வேண்டும்.

*பெண்கள் நெருங்கிய சொந்தங்களை தவிர மற்றவர்கள் மௌத் நடந்த வீட்டுற்கு செல்வதை தவிர்த்து கொள்ளவும்.

*ஜனாஸா அடக்கம் செய்யப்பட்ட உடன் அந்த இடத்திலேயே சலாம் சொல்லி கலைந்து சென்று விடவேண்டும்.

இப்படிக்கு..

அனைத்து ஜமாத் - அனைத்து இயக்க கூட்டமைப்பு
முத்துப்பேட்டை
திருவாரூர் மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments