ஏம்பகோட்டை மற்றும் ஆர்.புதுபட்டினத்தில் கொரோனா தொற்றுள்ள பகுதிகளை அறந்தாங்கி சப்-கலெக்டர் ஆய்வு!புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ள ஏம்பகோட்டை மற்றும் ஆர்.புதுபட்டினம் பகுதிகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கடந்த சில தினங்களுக்கு முன் அதிக நபர்கள் பாதிப்படைந்தனர்.

இதனால் இப்பகுதியில் செய்யப்பட்டுள்ள சுகாதார பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அறந்தாங்கி சப்-கலெக்டர் ஆனந்த் மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் இப்பகுதியில் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்ய தயார் நிலையில் உள்ளது என்று அவர் கூறினார். பின்னர் தடைசெய்யப்பட்ட பகுதியில் வாழும் மக்களுக்கு எவ்வகையான உதவி தேவைப்படுகிறது என்று அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

ஆய்வின் போது கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன், ஆவுடையார்கோவில் தாசில்தார் சிவராமன், மீமிசல் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், மீமிசல் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர்கள் ராமச்சந்திரன், கவுதம் மற்றும் சுகாதாரத் துறையினர், ஊரக வளர்ச்சித்துறையினர் உடன் இருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments