கூடுதல் கட்டணம் வசூலித்தால் தனியார் மருத்துவமனை உரிமம் ரத்தாகும் - தமிழக அரசு தகவல்





       கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.



கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதால் அரசே அந்த மருத்துவமனைகளை கட்டுப்பாட்டில் எடுத்து சிகிச்சை வழங்கவேண்டும் என்று பொதுநல வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படுமென தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்த புகார்களை தெரிவிக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த புகார்களை விசாரிக்க தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

மேலும் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அரசு மருத்துவமனைகளிலேயே படுக்கைகள் காலியாக இருப்பதால் அங்கும் வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.

இதனை பதிவுசெய்துகொண்ட நீதிபதிகள், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் சேர்வதற்கான வருமான உச்ச வரம்பை இருமடங்காக உயர்த்த உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments