மீமிசல் சிறு, குறு ஜவுளிக்கடை நிறுவனங்கள் தலைமை செயலாளர் அவர்களுக்கு கடிதம்!




மீமிசல் சிறு குறு ஜவுளிக்கடை நிறுவணங்கள் தலைமை செயலாளர் அவர்களுக்கு கோரிக்கை கடிதம்

மீமிசல் சிறு குறு ஜவுளிக்கடை நிறுவணங்கள் தலைமை செயலாளர் அவர்களுக்கு கோரிக்கை கடிதம் எழுதியுள்ளனர்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் சிறு குறு ஜவுளிக்கடை நிறுவணங்கள் தலைமை செயலாளர் அவர்களுக்கு கோரிக்கை கடிதம் எழுதியுள்ளனர் . அந்த கடிதத்தில் கூறியாதவது :

அன்புடையீர், வணக்கம்

கடந்த வருடம் கொரானா காலகட்டத்திலும் தொடர்ந்து மூன்று நான்கு மாதங்கள் கடைகளை அடைக்க வேண்டிய சூழ்நிலைக்கு சிறு குறு வியாபாரிகள் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து வியாபாரிகளும் அடைத்து அந்த சூழ்நிலையி-ல் வியாபாரிகள் அனைவரும் மிகுந்த பணக்கஷ்டம் மன உளைச்சல் பல இன்னல்களுக்கு ஆளானோம், அப்போதுள்ள ஒன்றிய மற்றும் மாநில அரசும் எந்த ஒரு சலுகையும் சிறு குறு வியாபாரிகளுக்கு அளிக்கவில்லை குறிப்பாக சிறு குறு செய்யும் புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் அதிகமாக உள்ள சிறு ஜவுளிக்கடைகள் மிகுந்ந மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம் சில நபர்கள் கடையை மூடும் நிலைமைக்கும் அளாகினார்கள் ஆகவே தமிழ்நாடு மாண்புமிகு முதலமைசர் அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில சலுகைகளை நாங்கள் எதிர்நோக்கி உள்ளோம் எங்கள் வாழ்வாதாரம் உங்கள் கைகளில் உள்ளது என்பதை நம்பி கீழே சிலவற்றை கூறுகின்றோம் நீங்கள் எங்களுக்கு இதை செய்வீர்கள் என்ற மிகுந்த நம்பிக்கையோடு

1) எங்கள் தொழிலுக்காக போன வருடம் லாக்டோன் போடப்பட்டதால் நான்கு மாதம் தொழில் செய்ய முடியாமல் போன சூழலில் எங்கள் வீட்டில் உள்ள நகைகள் மற்றும் சில வங்கி கடன் எல்லாவற்றையும் வங்கியில் வைத்துதான் தொடர்ந்து இந்த தொழிலை நடத்தி வருகின்றோம் ஆகவே அந்ந நகை கடனை தள்ளுபடி செய்யும் படியும் உங்களை பணிவன்போடு கேட்டுக் கொள்கின்றோம்

2) அதுபோக எங்கள் நிறுவனம் தற்பொழுதும் லாக்டோன் காலங்களில் கடந்த ஒரு மாத காலங்களாக அடைக்கப்பட்டு மேலும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளோம் ஆகவே எங்கள் வியாபரம் தொடர்ந்து செயல்பட வட்டியில்லா கடனை எங்களுக்கு வங்கியின் மூலம் அளிக்கும் படியும் உங்களை பணிவன்போடு கேட்டுக் கொள்கின்றோம்

3) மேலும் தற்போழது தொடர்ந்து எங்கள் கடைகள் அடைந்த வண்ணம் உள்ளதால் மின் கட்டணம் மற்றும் கடை வாடகை ஆகிறவற்றை தள்ளுபடி செய்து தரும்படியும் உங்களை பணிவன்போடு கேட்டுக் கொள்கின்றோம்

4) நாங்கள் கிராமப்புறங்களில் கடைகள் வைத்து நடத்திக் கொண்டிருக்கின்றோம் ஒரு நாள் 10 வாடிக்கையாளர்களே எங்கள் கடைக்கு வியாபாரம் செய்வதற்காக வருகிறார்கள் ஆகவே தாங்கள் அதையும் கருத்தில் கொண்டு கிராம புரங்களிள் செயல்ப்படும் எங்களை போன்ற ஜவுளிக்கடைகளையும் திறந்து செயல்பட நீங்கள் அனுமதி தரும்படியும் உங்களை பணிவன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.இப்படிக்கு

(1) மகிழ்ச்சி ஆடையகம் உரிமையாளர் எஸ்.முகமது யாசின்,

2) O.S:J. சுபயர் ஜவுளி ஹால் உரிமைய -ாளர் எஸ்.சுபயர் அமீர்,

3) ராஜா ராணி ஆடையகம் உரிமையாளர் எஸ் . சம்சுல் ரஹ்மான்,



4) சென்னை சில்க்ஸ் உரிமையாளர் A.செய்யது அபுதாகிர்,

5) ஆனந்தம் ஜவுளி உரிமையாளர் R.மாமுண்டி,



6) எவரெஸ்ட் ரெடிமேட்ஸ் உரிமையாளர் M.ஷேக் மைதீன்.

இன்னும் பல ஜவுளிக்கடைகள் மற்றும்

சிறு குறு அனைத்து வியாபாரிகள் ஆவுடையார் கோவில் தாலுகா,

புதுக்கோட்டை மாவட்டம்,

மீமிசல் போஸ்ட்,

மீமிசல்-614621




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments