கொரோனா 2-வது அலை: வாகனங்களுக்கான ஆவணங்களின் செல்லுபடியாகும் காலம் நீட்டிப்பு
இந்தியாவில்
 கொரோனாவின் 2-வது அலை தற்போதுதான் தணிய தொடங்கி இருக்கிறது. இந்த தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக பல மாநிலங்கள் பொது முடக்கத்தை அமல்படுத்தி உள்ளன.

இதனால் அத்தியாவசிய துறைகளை தவிர அரசின் மற்ற துறைகள் செயல்படவில்லை. இதனால் நாட்டில் நடக்க இருந்த பல முக்கிய நிகழ்வுகள் மற்றும் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டது.


அதேபோல், தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்து வந்த காரணத்தால் ஓட்டுநர் உரிமம், ஆர்சி, பிட்ன்ஸ் சர்டிபிகேட் போன்ற மோட்டார் வாகனங்கள் தேவையான அனைத்து ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை 2020 பிப்ரவரி முதல் நீட்டித்தது. இறுதியாக ஜூன் 30ம் தேதி வரை இந்த ஆவணங்கள் செல்லுபடியாகும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் முன்னதாக அறிவித்தது.

இந்தநிலையில் மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக வாகனங்களுக்கான ஆவணங்களின் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. அந்தவகையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி முதல் வருகிற செப்டம்பர் 30-ந்தேதி வரை காலாவதியாகும் வாகன பதிவு சான்றிதழ் (ஆர்.சி.), லைசென்ஸ், தகுதி சான்று, அனுமதி (அனைத்து வகை) உள்ளிட்ட வாகனம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் செப்டம்பர் 30-ந்தேதி வரை செல்லுபடியாகும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ள இந்த அமைச்சகம், இந்த உத்தரவை அனைவரும் தீவிரமாக பின்பற்றுவதை உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments