மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண உதவும் சமூக வலைதளங்கள்




மக்கள் தங்கள் தொகுதி பிரச்னைகளை தெரிவிக்க எம்எல்ஏ அலுவலகத்துக்கோ , எம்எல்ஏவின் வீட்டிற்கோ சென்று காத்துகிடக்க வேண்டியதில்லை. வாட்ஸ் அப், டிவிட்டர் போன்ற சமூகவலைதளங்களை பயன்படுத்தினாலே போதும் என்ற நிலை உருவாகி உள்ளது.
குடிநீர் பிரச்சனை, கழிவுநீர் அடைப்பு, மின்சார தடை என சிறு சிறு பிரச்சனைகள் தொடங்கி உடனடியாக ஆக்சிஜன் படுக்கை தேவைப்படுகிறது என்ற உயிர் காக்கும் பிரச்னைகள் வரை எதுவாக இருந்தாலும் சமூக வலைதளங்களின் உதவியால் தீர்க்கப்படும் காலம் இது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் டிவிட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், இமெயில் வாயிலாக மக்கள் தங்களின் பிரதிநிதிகளை எளிதாக தொடர்பு கொண்டு பிரச்னைகளை எடுத்துரைக்கின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் என பல எம்.எல்.ஏக்கள் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது தொகுதி மக்களின் குறைகளை அறிந்து தீர்வை ஏற்படுத்தி கொடுக்கின்றனர்.

“பிரச்னைகளை உடனே அறிந்து தீர்வு காண டிவிட்டர் உதவுகிறது. கொரோனா காலத்தில் பல உயிர்களை காத்திருக்கிறோம்” என சொல்கிறார் முன்னாள் அமைச்சரும், அதிமுக எம்.எல்.ஏவுமான விஜயபாஸ்கர். 


டிவிட்டர், பேஸ்புக் மட்டுமின்றி எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதி மக்களுடன் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் குரூப்களையும் பிரதானமாக பயன்படுத்துகின்றனர். இதற்காக வாட்ஸ் அப் பாட்களை உருவாக்கி இருப்பதாக கூறுகிறார் எழும்பூர் தொகுதி எம் எல் ஏ பரந்தாமன்.

இவ்வாறு சமூகவலைதளங்கள் வாயிலாக பிரச்னைகளை அறிந்து உடனடி தீர்வு காணும் போது மக்களுக்கு தங்கள் மீதுள்ள நம்பிக்கை அதிகரிப்பதாகவும், எதிர்காலத்தில் அரசியல் பங்களிப்பில் சமூக வலைதளங்கள் பெரும் பங்கு வகிக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை என்கின்றனர் மக்கள் பிரதிநிதிகள்.

டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற தளங்கள் இந்த காலகட்டத்தில் முக்கிய தொடர்பு ஊடகங்களாக மாறி இருக்கின்றன. மக்கள் பிரதிநிதிகளும் இதனை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments