மதுரை-துபாய் விமான சேவை ஜூலை 1 முதல் மீண்டும் தொடக்கம்
இந்நிலையில் மதுரை-துபாய் இடையேயான விமானப் போக்குவரத்து ஜூலை 1-ம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான கால அட்டவணையை மதுரை விமான நிலைய நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இதன்படி வாரத்தில் திங்கள், புதன், வியாழன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் துபாயில் இருந்து மதுரைக்கு காலை 10.40 மணிக்கு வரும் விமானம், மதுரையில் இருந்து துபாய்க்கு நண்பகல் 11.50 மணிக்கு புறப்பட்டுச் செல்கிறது. வெள்ளிக்கிழமையில் துபாயில் இருந்து புறப்படும் விமானம் மதுரைக்கு நண்பகல் 11.55 மணிக்கு வந்தடைகிறது. மதுரையில் இருந்து துபாய்க்கு பகல் 1.45 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.இந்த விமானங்களில் பயணம் செய்யும் பயணிகள் கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான ஆவணமும், கரோனா மருத்துவப் பரிசோதனைக்கான (பிசிஆர்) ஆவணமும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments