புதுக்கோட்டை மாவட்ட பொதுமக்கள் கோவிட் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்: கலெக்டர் கவிதா ராமு தகவல்!மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் நேற்று (28.06.2021) புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் கோவிட் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி பொது போக்குவரத்து தொடங்கப்படுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு தளர்வுகளில் 2 -ஆம் வகைகளில் அமைப்பெற்றுள்ள மாவட்டங்களில் பொது போக்குவரத்தை உரிய கோவிட் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி இயக்கிட உத்தரவிட்டுள்ளார்கள். அந்தவகையில் இன்றையதினம் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டது. 

புதுக்கோட்டை மாவட்டத்தை பொருத்தவரை மொத்தம் 564 வழித்தடங்களில் பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது. இதில் இன்றையதினம் முதற்கட்டமாக புறநகர் பேருந்துகள் 150-ம், நகர் பேருந்துகள் 139-ம் இயக்கப்படுகிறது. பேருந்து இயக்கத்தின் போது 50 சதவீத பயணிகளை அனுமதித்தல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கோவிட் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுறதா என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 
பொதுமக்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிதல், சமூகஇடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கோவிட் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் தொடர்ந்து இதுபோன்ற ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். 

இந்த ஆய்வில் புதுக்கோட்டை அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் இளங்கோவன், துணை மேலாளர் (வணிகம்) சுப்பு, வட்டாட்சியர் முருகப்பன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர் உடனிருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments