புதுக்கோட்டை மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை வட்டார கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி தீவிரம்!



புதுக்கோட்டை மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வந்தன. அவைகள் வட்டார கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டும் (2020) பள்ளிகள் திறக்கப்படாமல் போனது. இருப்பினும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், உபகரணங்கள் வழங்கப்பட்டன. ஆன்-லைன் மூலமாகவும், வாட்ஸ்-அப்பிலும் பாடங்கள் நடத்தப்பட்டன. கல்வி தொலைக்காட்சியிலும் பாடங்கள் ஒளிபரப்பப்பட்டன.

அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் தேவையான உதவிகளை செய்தனர். தற்போது இந்த கல்வி ஆண்டிலும் இதே நிலைமை நீடித்தது. இந்த நிலையில் அடுத்த கல்வியாண்டு தொடங்கியது. இதனால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டன. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள் வந்தன.
 
புதுக்கோட்டையில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலக வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களை அந்தந்த வட்டார கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் நேற்று பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி நடைபெற்றது. இதில் வட்டார கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்ட பின், அங்கிருந்து அந்தந்த பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். இதேபோல 9 முதல் பிளஸ்-2 வகுப்பு பாடப்புத்தகங்களுக்கு ஓரிரு நாட்களில் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளி திறந்தாலும், திறக்கப்படாவிட்டாலும் 2021-2022-ம் கல்வியாண்டிற்கான புத்தகங்கள் அச்சிடப்பட்டு வந்து சேர்ந்தன. அதனை மாணவர்களுக்கு எப்போது வினியோகிக்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிப்பார்கள். அதன்பின் அந்தந்த பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து புத்தகங்கள் வழங்கப்படும். கொரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையில் பள்ளிகள் இந்த ஆண்டு திறக்கப்படுமா? அல்லது திறக்கப்படாதா? என்பது குறித்தும், பாடங்கள் நடத்தப்படும் முறை பற்றியும் அரசு அறிவிக்கும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments