கோபாலப்பட்டிணம் ரேஷன் கடைகளில் 14 வகை மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கல்!தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தீவிரத்தை குறைக்கும் வகையில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

இதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் தமிழக அரசு, அரிசி ரேஷன் கார்டுகளுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்து முதல் தவணை ரூ.2 ஆயிரம் வழங்கியது. தொடர்ந்து 2ம் தவணையாக ரூ.2 ஆயிரம், கொரோனா சிறப்பு நிவாரணமாக 14 வகை மளிகை பொருட்களின் தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

இதற்கான டோக்கன் கடந்த 11ம் தேதி முதல் வீடு, வீடாக வழங்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 15ம் தேதி முதல் இலவச மளிகை பொருட்கள் மற்றும் ரூ.2 ஆயிரம் வழங்கும் பணி ரேஷன் கடைகளில் தொடங்கியது. ஒரு நாளைக்கு 200 பேர் வீதம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் 15 தேதி முதல் 21 வரை கோபாலப்பட்டிணத்தில் உள்ள இரண்டு ரேஷன் கடைகளில் 2000 ரூபாய் வழங்கப்பட்டது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கடற்கரை கிராமமான கோபாலப்பட்டிணத்தில் நேற்று ஜூன் 23 புதன்கிழமை இரண்டு ரேஷன் கடைகளில் டோக்கன் அடிப்படையில் கொரனோ நிவாரண 14 தொகுப்பு மளிகை பொருட்கள் வழங்கபட்டது. 

முன்னதாக எந்த தேதியில், எந்த நேரத்தில் ரேஷன் கடைகளில் நிவாரண பொருட்கள் பெற வேண்டும் என்பதற்காக ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் வினியோகிக்கப்பட்டது.
 
இதைத்தொடர்ந்து  கோபாலப்பட்டிணத்தில் இரண்டு ரேஷன் கடைகளில் கொரோனா சிறப்பு நிவாரண நிதி வழங்கும் பணி 8 மணிக்கு தொடங்கியது.
 
ஆனால் ரேஷன் கடை திறப்பதற்கு முன்னதாகவே ரேஷன் அட்டைதாரர்கள் சிலர் முககவசம் அணிந்தும், சிலர் முகக்கவசம் அணியாமலும் கையில் டோக்கனுடன் வந்து காத்திருந்ததை காணமுடிந்தது.  பின்னர் அவர்களுக்கு 14 வகை பொருட்கள் வழங்கப்பட்டது. அதனை அவர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுச்சென்றனர்.


புகைப்பட உதவி: கேப்டன் யூசுப்
 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments