அடடே தரமான கல்வி! ஜீரோ கல்வி கட்டணம்!! அரசு பள்ளியின் வித்தியாசமான அறிவிப்பு!!அறந்தாங்கி அருகே ஆவணத்தாங்கோட்டை மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்விக்கட்டண அறிவிப்பு தொடர்பாக பலகை போன்று தாளில் எழுதி ஒட்டப்பட்டுள்ளது.

அதில் நன்கொடை கட்டணம், சேர்க்கை கட்டணம், புத்தக கட்டணம், சீருடை கட்டணம், மதிய உணவு கட்டணம், கணினி பயிற்சி கட்டணம், ஆங்கில பயிற்சி வகுப்பு கட்டணம், கையெழுத்து வகுப்பு கட்டணம், புத்தகப்பை கட்டணம், டை, பெல்ட் கட்டணம் ஆகியவற்றை எழுதி அதற்கு நேராக ரூ.0 என எழுதப்பட்டுள்ளது. 

மேலும் தரமான கல்வி- உழைப்பு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வித்தியாசமான அறிவிப்பு சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments