புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் தமுமுக மருத்துவ அணி சார்பாக மருத்துமனையில் 300 நபர்களுக்கு உணவு வழங்கல்


புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் தமுமுக மருத்துவ அணி சார்பாக இன்று ECR பகுதி அரசு மருத்துவமனை  மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 300 நபர்களுக்கு மதிய உணவு  வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் மருத்துவ அணி செயலாளர் MSK சாலிஹ் அவர்கள் தலைமையில் இன்று (4-6-2021), வெள்ளிக்கிழமை மதியம் சிங்கவனம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ,

மணமேல்குடி அரசு மருத்துவமனை மற்றும் மணமேல்குடி கொரோன சிறப்பு சிகிச்சை மையம்

அம்மாபட்டிணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

 கோட்டைப்பட்டிணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

 ஆகிய இடங்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கும் மற்றும் அவர்களுடன் துணை இருக்கும் உறவினர்களுக்கும், மருத்துவமனை ஊழியர்களுக்கும் மற்றும் இதர மருத்துவமனை முன்கள பணியாளர்களுக்கும் இன்று மதிய உணவு வழங்கப்பட்டது

இதனை மனிதநேய மக்கள் கட்சி மாநில விவசாய அணி துணை செயலாளர் அஜ்மல் கான் அவர்கள் உணவுகளை வழங்கி துவக்கி வைத்தார்கள், மேலும் இந்நிகழ்வில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஃபைசல் அஹமது கட்டுமாவடி கிளை பொருளாளர் யூனிஸ் மரைக்காயர் செம்பியன் மஹாதேவி பட்டினம் ஊராட்சி மன்ற துணை தலைவர் கலீல் ரஹ்மான் அவர்களும் கலந்து கொண்டனர்.

என்றும் மனிதநேய மக்கள் பணியில், 

தமுமுக
மருத்துவ சேவை அணி
புதுக்கோட்டை
கிழக்கு மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments