நாகுடியில் வியாபாரியை தாக்கிய ஊராட்சி தலைவர் உள்பட 3 பேர் கைது!அறந்தாங்கி அருகே உள்ள நாகுடியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 45). துணி வியாபாரியான இவர் நாகுடி ஊராட்சி தலைவர் சக்திவேலை தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த சக்திவேல் (49), அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (28), காசிமுத்து (51) ஆகிய 3 பேரும் நேற்று வெங்கடேஷ் வீட்டிற்கு சென்று அவரை அடித்து அழைத்து வந்து நாகுடி கடைதெருவில் ஒரு கம்பில் கட்டி வைத்து மீண்டும் தாக்கினர். 

தகவல் அறிந்த நாகுடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெங்கடேஷை மீட்டனர். பின்னர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து ஊராட்சி தலைவர் சக்திவேல் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments