மணமேல்குடி, கட்டுமாவடியில் செயல்பாட்டுக்கு வந்த மீன் மார்க்கெட்!கட்டுமாவடி, மணமேல்குடியில் பெரிய மீன் மார்க்கெட்டுகள் உள்ளன. இந்த மீன் மார்க்கெட்டிற்கு விசைப்படகு, நாட்டுப்படகில் பிடிக்கப்படும் மீன்கள், இறால்கள் விற்பனைக்கு வருகிறது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. மேலும் நாட்டுப்படகில் பிடிக்கப்படும் மீன்கள் விற்பனைக்கு வந்தது. 

இந்நிலையில் கொரோனா 2-வது அலை காரணமாக ஊரடங்கு போடப்பட்டதால் மீன் மார்க்கெட்டுகள் மூடப்பட்டன. இந்நிலையில் அரசு மீன் மார்க்கெட்டுகளை திறக்க அனுமதி அளித்தது. ஆனால் சரிவர மீன்கள் வரத்து இல்லாததால் மீன் மார்க்கெட் திறக்கப்படாமல் இருந்தது. 

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மணமேல்குடி, கட்டுமாவடி மீன் மார்க்கெட்டுகள் திறக்கப்பட்டு மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மீன் மார்க்கெட் திறக்கப்பட்டாலும் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாததால் மீன் விலை சற்று அதிகமாகவே உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments