பற்றி எறிந்த கோபாலப்பட்டிணம் குப்பைக் கிடங்கு.. புகை பரவியாதல் கண் எரிச்சல், மூச்சுத் திணறலால் மக்கள் அவதி! கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகம்!



கோபாலப்பட்டிணம் குப்பைக் கிடங்கு தீ விபத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் உள்ள 6 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கலர் கம்பெனி பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முற்பகல் சுமார் 12.30 மணியளவில் குப்பை கிடங்கில் தீ பற்றியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் நெருப்பு மளமளவென பரவி குப்பைகள் அனைத்தும் கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் அப்பகுதிவாசிகளும் குழந்தைகளும் கண் எரிச்சல், மூச்சுத் திணறலால் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். தீ பற்றி எறியும் தகவல் கிடைத்த உடனே 7-வது வார்டு உறுப்பினர் சாதிக் பாட்சா அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஊராட்சி மன்ற செயலாளருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தார். மேலும் தீயணைப்பு துறைக்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்க முற்பட்டபோது தொலைபேசி எண் செயல்படவில்லை என தெரிவித்தார். ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவரோ அல்லது ஊராட்சி மன்ற துணை தலைவரோ சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு தீயை அணைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். 

இரவு நேரத்தில் தீ அணைந்த நிலையில் புகை வந்த வண்ணமாக இருந்தது.இதனால் இரவில் தூங்க முடியாமல் அப்பகுதி மக்கள் தவித்தனர்.










புகைப்பட உதவி: கேப்டன் யூசுப்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments