ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆய்வு கூட்டம்! கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விழிப்புணர்வு தேவை என வலியுறுத்தல்!!ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக ஊராட்சிதலைவர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு அறந்தாங்கி சப்-கலெக்டர்ஆனந்த் மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) தேவிகாராணி, ஆவுடையார்கோவில் தாசில்தார் சிவக்குமார், ஒன்றியக் குழுத் தலைவர் உமாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் பிரியா குப்புராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமாரவேல், குமரன் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர். 
கூட்டத்தில் ஊராட்சி தலைவர்கள் தங்கள் பகுதிகளில் கொரோனா பாதித்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தனிப்படுத்தப்பட்டவர்கள் வீட்டிலேயே இருக்கிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும். அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments