அரசு செட்டாப் பாக்ஸ் குறித்த புகார்களை பொதுமக்கள் தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்: புதுகை கலெக்டர் கவிதா ராமு தகவல்!தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் பொதுமக்களுக்கு இலவசமாக செட்டாப் பாக்ஸ்களை மாதசந்தா தொகை ரூ.140 மற்றும் ஜி.எஸ்.டி. கட்டணத்தில் உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

அரசு செட்டாப் பாக்ஸ் பெற்று பயன் அடைந்து வரும் சந்தாதாரர்களின் விருப்பம் இல்லாமல் ஆபரேட்டர்கள் அரசு செட்டாப் பாக்சை மாற்றினாலோ அல்லது அரசு சிக்னல் இனி வராது என்று தவறான தகவலை கூறி அரசு செட்டாப் பாக்சை நீக்கம் செய்து விட்டு தனியார் செட்டாப் பாக்சை மாற்றினாலோ உடனடியாக 04322-230700 என்ற தொலைபேசி எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம். 

அரசு கேபிள் டி.வி. தொடர்ந்து எவ்வித தடையுமின்றி செயல்படும். மேற்கண்ட தகவலை கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments